Spoken Hindi through Tami on Clubhouse

Spoken Hindi through Tami Clubhouse
186 Members
Updated: Mar 17, 2024

Description

நான் 33 வருடங்களாக ஹிந்தி ஆசிரியராக பணி ஒரு பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக பணி புரிகிறேன். Telegram appல் Online Spoken Hindi through Tamil வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ஹிந்தியில் பேசும் பயிற்சி கொடுத்து வருகிறேன்.அதில் பயிலும் மாணவர்களுக்கு பேச்சு பயிற்சி தரும் பொருட்டு இந்த அறை உருவாக்கப்பட்டுள்ளது. என் தந்தை சுப்பிரமணியன் அவர்கள் ஓர் ஹிந்தி ஆசிரியர். தன்னுடைய 60 வருட அனுபவத்தில் இயற்றிய பேச்சுவார்த்தை பயிற்சி ஹிந்தி நூல் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு அதன் சார்ந்த தலைப்பில் உரையாடல் இவ்வறையில் நடைபெறும். எளிமையாக சிறு சிறு ஹிந்தி வாக்கியங்களை அறிந்து பேசும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்புத்தகத்தில் 217 தலைப்புகள் உள்ளன. ஒவ்வொரு தலைப்பில் பாடம் நடத்தப்படுகிறது. ஒரு தலைப்பில் புத்தகத்தில் இருந்து பாடம் நடத்தும் போது மேலும் பல வாக்கியங்கள் கற்பித்தால் தான் நலம் ‌என கருதுகிறேன். ஏனெனில் புத்தகத்தில் இருப்பது மட்டும் நடைமுறை வாழ்க்கையில் வருவதில்லை. ஆகையால் புத்தகத்தில் இல்லாத பல வாக்கியங்களை கற்பிக்க இவ்வறையை தேர்ந்தெடுத்து உள்ளேன். ஏனெனில் நேரடி வகுப்பில் பலர் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலையில் பாடம் விடுபட்டு போகிறது. இந்த வகுப்பறையில் நான் நடத்திய பாடங்கள் ரெகார்ட் செய்யப்படுகிறது. விடுபட்டு போன மாணவர்கள் பின்னர் நான் நடத்தியவற்றை கேட்டு பயன் பெறலாம்.
குழுவின் விதிமுறைகள்.
1. வகுப்பு நடைபெறும் போது எவரும் இடையில் பேசி குந்தகம் விளைவிக்கக் கூடாது..
2. ஆசிரியர் அனுமதியுடன் பேச வேண்டும்.
3. வெட்டிப் பேச்சு தவிர்க்க வேண்டும்.
4. புதிதாக என் telegram app வகுப்பில் இணைய விரும்புபவர்கள் எனக்கு மெசேஜ் அனுப்பவும்.
5. நம் வகுப்பின் முக்கிய விதி எப்போது எனக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போது பாடம் நடத்துவேன். அதே மாணவர்களுக்கு எப்போது நேரம் கிடைக்குமோ அப்போது பயின்றால் போதும். ஏனெனில் அனைவருக்கும் வேலை பளு இருப்பது சகஜமாகும்.
தாங்கள் ஹிந்தியில் நன்கு பேசிட என் வாழ்த்துகள்.

Last 30 Records

Day Members Gain % Gain
March 17, 2024 186 +2 +1.1%
January 27, 2024 184 +7 +4.0%
December 13, 2023 177 +5 +3.0%
November 04, 2023 172 +2 +1.2%
October 04, 2023 170 +3 +1.8%
September 05, 2023 167 +9 +5.7%
August 07, 2023 158 +6 +4.0%

Charts

Some Club Members

More Clubs