பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.
{ ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம் செய்யாதிருத்தல் சிறந்ததாகும். }
*****
இரும்பு தகட்டினால் இதயத்தைக் கீறி விட்டு இஞ்சி சாறூற்றி எட்டி மிதித்தபின் பஞ்சி மிட்டாய் கொடுத்து பத்திரமாய் இருவென்று கூறினால் மறந்திடுமோ என் மனது..?
என்றும் அழகன்...
*****
கண்கள் இரண்டில் கண்ணீரோ கடலளவு ..!
அழவைக்கும் அளவிற்குக் கூட அதைத் துடைத்திட எவரும் வருவதில்லை .
கண்ணீரும் எனதே ..?
கவலையும் எனதே ..?
உனக்கென்ன கவலை போடா போ ...
என்றும் அழகன்...
****
முதல் காதல் உனது என்றால் உயிரையும் கொடுத்திடு உயிர் போகும் ஒரு கணம் உன் மனதைக்கேள் உன் காதல் எதுவென்று..
உன்னை நேசிக்கும் ஓர் உறவா...?
நீ நேசிக்கும் ஓர் உறவா...?
என்றும் அழகன்..
******