சிவாயநம. என சிந்தனையில் இருப்பவருக்கு அபாயம் ஒன்றுமில்லை ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சரவணபவ.
வேலும் மயிலும் துணை
தினமும் இரவு 9 மணிக்கு சிவபுராணம் திருமுறை திருப்புகழ் தேவாரம் பாராயணம் செய்யப்படும்
திருச்சிற்றம்பலம்
காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000
அமுதம் உற்பத்தியாகும் வகை
ஏறுமே மூலக்கனல் மேலேவாசி
இரண்டொன்றாய்க் கூடியது நடுவேனின்று
மீறுமே முடிச்செலும்பை பத்தி நின்று
மேனியெல்லாம் ஓடாது நடுவேயோடும்
வாறுமே மேலேழும்பி நினைவைமேலே
வாய்பொத்தி அச்சமயம் பிடரியேறும்
சீறுமே மேலேறத் தள்ளும்பின்னால்
திரும்பாமல் நாக்கின் வழிசாருந்தானே
பொருள் :
மூலக்கனலும் வாசியும் கலந்து நடுவே நின்று , உடலெல்லாம் ஓடாமல் – மேலேறும் .
நடு நெற்றி சேரும்
அப்போது நினைப்பை மேல் வைத்து , வாய் மூடி மௌனம் காக்க வேணும்
இக்கூட்டு , நெற்றிக்கண் சேர்ந்தால் நாக்கில் அமுதம் ஊறும்
ஓம் சிவயவசி திருச்சிற்றம்பலம்🍂🍂🍂
திருச்சிற்றம்பலம் என்றால் என்ன தெரியுமா?
சிறு+அம்பலம்= சிற்றம்பலம். சிறிய வெளி என்று பொருள். அம்பலம்- வெளி, ஆகாயம். நமது இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டைவிரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும் கடோபநிஷத் கூறுகிறது. அவ்வான்மாவுக்குள் ஆன்மாவாய் இறைவன் ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருப்பதாய் சிவாகமங்கள் கூறுகின்றன. இதனை நம் போன்றோர் உணர்ந்து வழிபட்டு உய்வதற்காக தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் திருக்காட்சியளித்ததாக கோயில்புராணம் எடுத்துரைக்கின்றது.
அதாவது நாம் தான் அது, அதுவே நாம் என்பதை உணர்த்துவதற்க்கே இந்த ஆனந்த திருநடனம். அதாவது மனிதனின் அகம் ஒரு கோயில் உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம், திருச்சிற்றம்பலம் என்றால் நம்முள் இருக்கும் ஆன்மாதான்.பொதுவே தில்லையை சுற்றி வசிக்கும் மக்களும், சிவனே சிவம் என்று உணர்ந்த ஆன்மீக பெருமக்களும் ஒருவருக்கொருவர் பார்க்கும் போதும், பேசும் போதும், தொடக்கத்திலும் , முடிவிலும் இரு கைகூப்பி திருச்சிற்றம்பலம் என்று கூறுவர். அதற்க்கு எதிர்புரம் உள்ளவர் தில்லையம்பலம் என்று பதில் வணக்கம் கூறுவர். இதற்க்கு என்ன பொருள் என்றால் உண்ணுள் இருக்கும் (பின்டத்தில் இருக்கும் உன் ஆன்மா அண்டத்தில் கரையட்டும்)உன் ஆன்மா சிற்றம்பலத்தில் இருக்கும் உன் ஆன்மா நிறைவு பெறுவதாக பரிபூரணமாவதாக என்று பொருள். அதற்க்கு எங்கே செல்ல வேண்டும் என்றால் தில்லையம்பலம் என்று எதிரில் உள்ளவர் பதில் வணக்கம் சொல்லுவர்.
உங்களை பார்த்து இனிமேல் யாராவது திருச்சிற்றம்பலம் என்று சொன்னால் உங்கள் ஆத்மா நிறைவுபெறட்டும் என்று அவர்கள் வாழ்த்துகிறாற்கள் என்று அர்த்தம் பதிலுக்கு தாங்களும் தில்லையம்பலம் என்று கூறவேண்டும். கூறுவதோடு நில்லாமல் தில்லையம்பலத்தில் உள்ள ஆனந்த கூத்தனை தரிசிக்க வேண்டும். உருவத்தில் இருந்து அருவமாக உன் ஆன்ம கரைய வேண்டும் என்றால் தில்லைக்கு போக முக்தி. இதனை உணர்த்தவே திருசிற்றம்பலத்தில் நடராஜ பெருமான் மனித ரூபத்தில் ஆனந்தகூத்தாடுகிறான்
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
October 10, 2023 | 242 | +15 | +6.7% |
January 30, 2023 | 227 | +1 | +0.5% |
September 30, 2022 | 226 | +2 | +0.9% |
August 09, 2022 | 224 | +15 | +7.2% |
July 03, 2022 | 209 | +11 | +5.6% |
April 19, 2022 | 198 | +15 | +8.2% |
March 11, 2022 | 183 | +33 | +22.0% |
January 13, 2022 | 150 | +28 | +23.0% |
December 06, 2021 | 122 | +57 | +87.7% |