"Forever is an illusion"
🃏
கண்கள்!
கண்கள் மூடி கனா காண்கிறேன்,
தாய் அவள் முதல் தீண்டலை
கனா காண்கிறேன்,
தந்தை அவன் முகத்தை வர்ணித்து
கனா காண்கிறேன்,
பாட்டியின் கதைகளுக்கு உருவம்
கொடுத்து கனா காண்கிறேன்,
தாத்தாவின் குதிரை சவாரியில் நானே ராஜாவென கனா காண்கிறேன், கவலைகளைத்
துடைத்த நண்பனின் தோலை
கனா காண்கிறேன்,
காதலை தந்த காதலியை நினைத்து
கான காண்கிறேன்,
ஊனம் இல்லா குழந்தைகள் பிறக்க
கனா காண்கிறேன்,
என் கவிதைக்கு உயிர் கொடுத்து
கனா காண்கிறேன்,
பார்வையற்ற கண்கள் கொண்ட இந்த குருடன்,
கண் திறந்தும் கருமை நிற
கனா காண்கிறேன்!
- ஜீவா ஜெயசந்திரன்.
கவிதையே என் மொழி....