எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் கான்பது அறிவு.
மனிதம் வளர்ப்போம்!!....
மனிதம் வளர்ப்போம்!!....
என் எதுகையையும், உங்கள் மோனையையும்
ஓரமாய் ஒதுக்கி வைத்து விட்டு .....
எதார்த்தம் என்கிற பதார்த்தம் கொண்டு ....
மனிதம் என்கிற புனிதம் வளர்ப்போம் !!...
வாருங்கள் நண்பர்களே!!.....வாருங்கள்!!...
உறவுகளில் முதலில் மனிதம் வளர்ப்போம் -பின்
உள்ளத்தில் வளர்ப்போம்!!....
சாதிக்கும் மதத்திற்கும் இறுதி அஞ்சலி
செலுத்திவிட்டு வாருங்கள் நண்பர்களே !!....
சிறிது நேரம் மனிதம் பற்றி
மௌனமாய் பேசுவோம்!!...
தொலைக்காட்சி பேசுகிறது மனிதம் பற்றி!....
வானொலி பேசுகிறது மனித நேயம் பற்றி!....
இணையதளம் பேசுகிறது
மனிதாபிமானம் பற்றி!!....மனிதா!!...
நீ எப்போது பேசுவாய் உனைப்பற்றி!!.....
"பாலியல் பலாத்காரம் "என்கிற வார்த்தையை
"பத்திரிகைகள்"
பாலியல் பலாத்காரம் செய்துவிட்டன....
அங்கே ஆடை கட்டாமல்
அம்மணமாய் அழுகிறது.....
அந்த நிறைகுறை மனிதம்!!.....
காக்கை கதறுகிறது!!.....
குப்பை தொட்டியில் தொப்புள் கொடி அருந்த
குழந்தையைப் பார்த்து!!.....
வரவேற்பு பலகையில் தலை வாசகம்
" பெண்குழந்தை கடவுளின் வரம்"!!...
சீவகனாக ஆசை சிலபேர்க்கு
பரத்தையாய் வாழ பரீட்சையம் பலபேர்க்கு
யாராவது "உருவமில்லாத உலகநாயகன்" ஆகுங்கள் பார்ப்போம்!!....
யாராவது "வாய் பேசாத சாலமன் பாப்பையா"
ஆகி காட்டுங்கள் பார்த்துவிடுவோம்!!....
அவரான இவரையும்
இவரான அவரையும் !!.......
நெடுஞ்சாலை நெடு மரங்களை
வெட்டி எறிந்தோம்!!...
கருத்த வனத்தைக் கருவருத்தோம்!!....
கனிமவளம் கற்பழித்தோம்!!....
பச்சை மரம் ஒன்று நடும்
பேச்சை மட்டும் கள்ளிப்பால் கொடுத்து
கருக்கலைப்பு செய்துவிட்டோம்!!.....
முதலில்
"வீட்டுக்கு ஒரு மரம் வளப்போம்"!!,,,,
பின்
"மனிதம் வளர்ப்போம்"!!....
இனி ஒரு பிறப்பா பிறக்கப்போகிறோம்?!....
வாய்ப்பில்லை என்பதே அதிக பதில்!!.... -ஆனால்
ஒரு நல்ல வழியிருக்கிறது!!....
கடை ஏழு வள்ளல்களையும்
மிஞ்சவும் ஒரு வாய்ப்பு - அதுதான்
" உடல்தானம் "
கொடை வள்ளல் கர்ணனையும்
மிஞ்சவும் ஒரு வழி - அதுதான்
" இரத்த தானம்"
இந்த பூஉலகின் எட்டாவது வள்ளல் "கிதயெந்திரன்"
ஒன்பதாவது வள்ளல் நீங்களாகவும் இருக்கலாம்!!...
ஏன் நானாகவும் இருக்கலாம்!!.....
மலாலாவின் கையைத்
தொட தகுதி இழந்த
அமைதிக்கான நோபல் பரிசினைப் போல
மனிதன் "மனிதம்" என்கிற புனிதத்தை
தொடத் தகுதி இழந்தவனாகவே இருக்கின்றான்!!.....
அன்பிற்கு இனியவர்களே!!....
மானசீகனைப் போல நாமும் மானசீகமாய்
வாழ கற்றுக்கொள்வோம்!!...
Don't Spread Negativity: Don't spread negativity, that stuff is contagious and ruins us. The good news is, positivity can also be contagious and it lifts us.
No Abusive: Controllers, Abusers and manipulative people don't question themselves. They don't ask themselves if the problem is them. They always say the problem is someone else.
மனிதம் வளர்ப்போம்!!......: மனிதம் வளர்ப்போம்!!....
மனிதம் வளர்ப்போம்!!....
என் எதுகையையும், உங்கள் மோனையையும்
ஓரமாய் ஒதுக்கி வைத்து விட்டு .....
எதார்த்தம் என்கிற பதார்த்தம் கொண்டு ....
மனிதம் என்கிற புனிதம் வளர்ப்போம் !!...
Don't Spread Negativity
Don't spread negativity, that stuff is contagious and ruins us. The good news is, positivity can also be contagious and it lifts us.
No Abusive
Controllers, Abusers and manipulative people don't question themselves. They don't ask themselves if the problem is them. They always say the problem is someone else.
மனிதம் வளர்ப்போம்!!......
மனிதம் வளர்ப்போம்!!....
மனிதம் வளர்ப்போம்!!....
என் எதுகையையும், உங்கள் மோனையையும்
ஓரமாய் ஒதுக்கி வைத்து விட்டு .....
எதார்த்தம் என்கிற பதார்த்தம் கொண்டு ....
மனிதம் என்கிற புனிதம் வளர்ப்போம் !!...
Day | Members | Gain | % Gain |
---|---|---|---|
July 22, 2024 | 40 | 0 | 0.0% |
April 26, 2024 | 40 | +1 | +2.6% |
February 13, 2024 | 39 | 0 | 0.0% |
December 30, 2023 | 39 | 0 | 0.0% |
November 16, 2023 | 39 | 0 | 0.0% |
October 16, 2023 | 39 | 0 | 0.0% |
September 16, 2023 | 39 | 0 | 0.0% |