திண்ணை என்பது மரபுவழி வீடுகள் மற்றும் அது போன்ற கட்டிடங்களில், வாயில் கதவுக்கு அருகிலோ அல்லது அவற்றின் உட்பகுதியில் சில இடங்களிலோ காணப்படுகின்ற மேடை போன்ற அமைப்புக்களாகும். ஓலைக்குடிசையின் ஒட்டுத்திண்ணை தொடங்கி, ஓங்கி உயர்ந்த மச்சுவீட்டின் வரவேற்பு திண்ணை வரை அன்றைய மக்களின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நீக்கமற நிறைந்திருந்தன திண்ணைகள். அதில் அமர்ந்துதான் பாட்டிகள், பேரன் பேத்திகளுக்கு கதைகள் சொன்னார்கள். இளசுகள் பல்லாங்குழி விளையாடினார்கள், பரமபதம் ஆடினார்கள், அப்பாக்கள் அரசியல் பேசினார்கள், புறக்கடை திண்ணையில் அமர்ந்து புது மணத்தம்பதியர் நிலாவை ரசித்தார்கள். வாசல் திண்ணையில் வழிப்போக்கர்கள் படுத்து இளைப்பாறினார்கள். சித்திரை பௌர்ணமியில் நிலாச்சோறும், கூடிக் குதூகலித்து கூட்டஞ்சோறு சாப்பிட்டு மகிழ்ந்ததும் திண்ணைகளில்தான். பூப்படைந்த பெண்ணுக்கு தாய்மாமன் பச்சை குடில் கட்டி கொடுத்ததும் இந்த திண்ணையில்தான். வாதி, பிரதிவாதிகள் குழுமி நிற்க உயரத்திண்ணையில் உட்கார்ந்து ஊர் நாட்டாமை மாற்றாத தீர்ப்புக்களை சொன்னதும், பஜனைகள், பக்தி பாடல்கள், கதாகாலஷேபங்கள், கச்சேரிகள் என்று விசேஷ நாட்களின் கலை மேடைகளாக திகழ்ந்ததும் இந்த திண்ணைகள்தான். பாட்டனும், முப்பாட்டனும் பள்ளிகொண்ட திருபாற்கடல் அந்த சாய்மானத் திண்ணைகள் தான். நாட்டு வைத்தியர்களின் மருத்துவமனையும், மருந்துக்கடையும் அவர் வீட்டு திண்ணைகளில் தான். இப்படியாக, நமது ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு அங்கமாக இருந்த இந்த திண்ணைகள் இன்று நவீன நாகரிகம், வாஸ்து என்ற பலவேறு காரணங்களால் காணாமல் போய்விட்டன. கல்வி, விளையாட்டு, ஆடல், பாடல், பக்தி, இசை, கதை, காதல், காமம், மகிழ்வு, சோகம், முதுமை என்று நமது கலாச்சாரங்களை சொல்ல ஆயிரமாயிரம் விஷயங்கள் உண்டு திண்ணைகளிடம். ஆனால், அந்த திண்ணைகள் இல்லை இன்று நம்மிடம். இருந்தாலும் திண்ணைகளைப் போற்றும் விதமாக , பேசு களம் கொண்டு போற்றுவோம் .
இயன்றவரை தமிழில் பேசுவோம்! Let us try talking in Tamil: நாம் இயன்றவரை தமிழில் பேசுவோம் . உன்னத மொழியான நம் தமிழ் மொழியின் சிறப்பை பிறர் போற்றும் விதமாகவும், உணரும் விதமாக கலந்துரையாடுவோம். We’ll speak Tamil as much as possible. Use this space so you can speak freely.
அன்பாகவும் இயல்பாகவும் பேசுங்கள் ! Be friendly & Polite : நாம் பேசுவதை பிறர் கேட்க எவ்வளவு நம் மனம் விரும்புமோ , அதே விருப்பத்துடன் பிறர் பேசுவதையும் கேளுங்கள் . Listen to what others are saying with the same desire as our mind wants us to hear others speak.
இயன்றவரை தமிழில் பேசுவோம்! Let us try talking in Tamil
நாம் இயன்றவரை தமிழில் பேசுவோம் . உன்னத மொழியான நம் தமிழ் மொழியின் சிறப்பை பிறர் போற்றும் விதமாகவும், உணரும் விதமாக கலந்துரையாடுவோம். We’ll speak Tamil as much as possible. Use this space so you can speak freely.
அன்பாகவும் இயல்பாகவும் பேசுங்கள் ! Be friendly & Polite
நாம் பேசுவதை பிறர் கேட்க எவ்வளவு நம் மனம் விரும்புமோ , அதே விருப்பத்துடன் பிறர் பேசுவதையும் கேளுங்கள் . Listen to what others are saying with the same desire as our mind wants us to hear others speak.
Day | Members | Gain | % Gain |
---|---|---|---|
July 08, 2024 | 182 | +1 | +0.6% |
March 27, 2024 | 181 | +1 | +0.6% |
February 06, 2024 | 180 | +1 | +0.6% |
December 23, 2023 | 179 | +3 | +1.8% |
November 11, 2023 | 176 | +1 | +0.6% |
October 11, 2023 | 175 | +1 | +0.6% |
September 11, 2023 | 174 | 0 | 0.0% |
August 13, 2023 | 174 | -1 | -0.6% |
July 12, 2023 | 175 | +2 | +1.2% |
June 18, 2023 | 173 | +3 | +1.8% |
March 17, 2023 | 170 | 0 | 0.0% |
March 02, 2023 | 170 | +2 | +1.2% |
January 04, 2023 | 168 | +1 | +0.6% |
December 24, 2022 | 167 | +1 | +0.7% |
November 25, 2022 | 166 | +1 | +0.7% |
November 18, 2022 | 165 | +1 | +0.7% |
August 08, 2022 | 164 | +1 | +0.7% |
June 30, 2022 | 163 | +1 | +0.7% |
June 23, 2022 | 162 | +3 | +1.9% |
May 21, 2022 | 159 | +1 | +0.7% |
March 12, 2022 | 158 | +4 | +2.6% |
November 24, 2021 | 154 | +1 | +0.7% |
November 12, 2021 | 153 | +2 | +1.4% |
November 07, 2021 | 151 | -1 | -0.7% |