எழுதுவதை ரசிப்பவன் 💚💚
ரசிப்பதை எழுதுபவன் ❤❤
தான் யாராக,
எப்படி,
ஏதாக,
எதுவாக,
இருக்க வேண்டும் என்ற
புற கருதுகோள்களை,
மனதளவில்
மறுப்பவராகவே இருங்கள்!
இதனால் நீங்கள்
சிலரின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகலாம்!
சிலரின் வசைமாரிகளுக்குள்
சிக்கிக் கொள்ள வேண்டிய
தருணம் வரலாம்!
அபிமானத்தைப் பெற்ற
அன்பாளர்களைக் கூட
இழக்க நேரிடலாம்!
ஆயினும்!
நீங்கள் எப்படி இருக்க வேண்டும்
என்பதைப் பற்றிய
பிறரின் அபிப்பிராயங்களிலிருந்து
விலகி வாழ்வது தான்,
உங்களுக்கேயான அடையாளத்தை
உருவாக்கித் தரும்.
நீங்கள் பிறப்பெடுத்திருப்பதானது...!
பிறரின்
எண்ண அங்கலாய்ப்புக்களில் அடங்கி, அதன்படி பிரதிபலிக்கவல்ல!
சதாவும்
உங்களுக்கே உண்டான
குணாதிசயங்களோடு மிளிரத்தான்.
ஆதலால்...!
அதில்,
சமரசம் செய்து இயல்புகளையும்,
அடிக்கடி பேரம் பேசி
சந்தைப் படுத்த
இங்கே கூட்டம் சேரும்கொள்வதற்கு
எதுவுமில்லை!
அதில்,
நெகிழ்வுத் தன்மை காட்ட முடியும்! என, நீங்கள் ஒரே ஒரு தடவை
அங்கீகாரம் வழங்கி விட்டால்!
உங்களின் சுயத்தையும்,
!