தமிழில் பார்வைமாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு குறித்து எழுதத் தொடங்கிய முதல் நபர். வெளயாட்டுப்பய என்ற புனைப்பெயரில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு குறித்து இணையவெளியில் தொடர்ச்சியாக எழுதி வருகிறேன். பார்வையற்றவர்களுக்காக வெளிவந்த (விழிச்சவால்) எனும் பிரேயில் மாத இதழில், தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக (ஆட்டக்களம்) எனும் தலைப்பில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் குறித்து மாதந்தோரும் எழுதிவந்தேன். விரல்மொழியர் மின்னிதழிலும் பார்வையற்றோரது விளையாட்டு குறித்து எழிதி வருகிறேன். விரல்மொழியரின் 25-வது இதழான விலையாட்டுச் சிறப்பிதழின் முதன்மை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு அவ்விதழை வெளிக்கொணர்ந்தேன். பார்வையற்றோர் விளையாட்டு குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரையையும் சமர்ப்பித்திருக்கிறேன்.
தமிழ்நாடு பார்வையற்றோர் கிரிக்கெட் அணியில் 2007 முதல் இன்று வரை, கிட்டத்தட்ட 15 ஆண்டுகாலமாக சகலதுரை ஆட்டக்காரராக விளையாடி வருகிறேன். இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிக்கு தலைவராக பல ஆண்டுகள் கடமையாற்றியிருக்கிறேன். பார்வையற்றோருக்கான தமிழ்நாடு கால்பந்தாட்ட அணியை தலமைதாங்கி வழிநடத்தியிருக்கிறேன். சதுரங்கத்தில் மாநில அளவில் உச்சபட்சமாக நான்காவது இடத்தை 2007-ஆம் ஆண்டு பெற்றிருக்கிறேன். குறுந்தூர ஓட்டம், வட்டெறிதல், குண்டெறிதல் போன்றவற்றில் மாநில அளவில் பதக்கங்களை பெற்றிருக்கிறேன்.
தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கம் மற்றும் தமிழ்நாடு பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம் இரண்டிலும் செயற்குழு உறுப்பினராக தற்போது கடமையாற்றி வருகிறேன்
புதுக்கோட்டை மாவட்டம் சண்முகநாதபுரம் எனும் குக்கிராமத்தில் பிறந்த என்னை இந்தியா முழுமைக்கும் அழைத்துச் சென்றதோடு மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் உடல் பலத்தையும் மன பலத்தையும் விளையாட்டு எனக்கு கொடுத்தது.
களத்தில் பெற்றவற்றையும் கற்றவற்றையுமே நாம் தொடர்ச்சியாக எழுதி வருகிறேன்.
-- கைபேசி: 9159669269
மின்னிதழ்:
www.viralmozhiyar.com
முகனூல்: http://facebook.com/paarvaiyatravan
எனது youtube channel
http://www.youtube.com/c/பார்வையற்றவன்
கீச்சு: https://twitter.com/paarvaiyatravan
இணையதளம்: www.paarvaiyatravan.blogspot.com