உங்களை நீங்களே பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டாம். தகுதி இருக்குமிடம் நோக்கி புகழ் தானாகவே வரும்.
நல்ல உணவால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. அது போல, நல்ல உணர்வுகளால் உள்ளம் ஆரோக்கியம் பெறுகிறது.
நேர்மை, ஒழுக்கம் இவற்றைப் புறக்கணிப்பதால் வாழ்க்கையில் வசதிவாய்ப்பு பெருகலாம். ஆனால் மனநிம்மதியை இழக்க நேரிடும்.
புறவுலகில் இருந்து உள்முகமாக மனதை திருப்புங்கள். இதனால் மனஅமைதி நிலைத்திருக்கும்.
கடமைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஏனென்றால் அதில் தான் உங்களின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது.
ஆசைக்கு ஒரு வரம்பை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். மனம் போன போக்கில் சென்றால் துன்பமே உண்டாகும்.
செல்லும் இடம் எல்லாம் அன்புப் பயிரை விதையுங்கள். உங்களால் இந்த உலகம் அன்பு மயமாகட்டும்.