"பருந்தானவன்"...
- சு.மு.அகமது
" காற்று நிரம்பி வழியும் கோப்பை நான்"
சப்தமற்ற சில்லரைகள்
----------------------------
கவிப்பொழுதின் அந்திமக்காலம்...
ஒரு பறவையின் கடைசி சிறகு
இலை உதிர்த்த மரம்
சப்தமின்றி மறைந்து போன செப்புக்காசு
மணி அற்றுப்போன கால் கொலுசு
எதுவாகவும் இருக்கக்கூடும்
விடியல் என்பது
குஞ்சுப் பறவையின் பிசுபிசுத்த இறகாயும்
தளிர் இலை தாங்கிய புது மரமாயும்
படபடக்கும் புது பணத்தாளாயும்
சிணுங்கும் மணிகளோடு சிலிர்க்க வைக்கும் நாதமாயும்
பிரபஞ்சத்தையே ஆட்கொள்ள விழையும்
சப்தமற்ற சில்லரைகளாகவும் பரிணமிக்கலாம்
இருக்கைகள் காலியாவதில்லை
அவை மதிப்பு கூட்டுபவை
என்றும் கூடுபவை
வசீகரமும் வனப்புமாய் ஆகர்ச்சிப்பவை
அண்ணாந்து பார்க்கையில்
புள்ளியின் துளியாய் வியப்பாளிகள்
அந்திமத்தின் அருகாமையில்
தங்கள் இலைகளை உதிர்த்தபடி
- சு.மு.அகமது
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
October 11, 2023 | 103 | +4 | +4.1% |
January 31, 2023 | 99 | -1 | -1.0% |
July 03, 2022 | 100 | +1 | +1.1% |
May 27, 2022 | 99 | -1 | -1.0% |
April 19, 2022 | 100 | +2 | +2.1% |
March 11, 2022 | 98 | +1 | +1.1% |
January 13, 2022 | 97 | +5 | +5.5% |
December 06, 2021 | 92 | +4 | +4.6% |