பிரியன் பாடலாசிரியர் on Clubhouse

Updated: Aug 18, 2023
பிரியன் பாடலாசிரியர் Clubhouse
128 Followers
2 Following
Jun 14, 2021 Registered
@piriyanlyricist Username

Bio

கவிஞர் | பாடலாசிரியர் | தமிழ்த்திரைப்பாக்கூடம் நிறுவனர்

தமிழ்த்திரைத்துறையில் பாடலாசிரியராக இதுவரை 450-க்கும் மேற்பட்டப் பாடல்கள். 200-க்கும் மேற்பட்ட விளம்பரப் பாடல்கள்.

எழுதிய பாடல்களில் சில :

கடாரம் கொண்டான் - கடாரம் கொண்டான்..

படைவீரன் - லோக்கல் சரக்கா.. மற்றும் இதுவரை நான்..

பிச்சைக்காரன் - உனக்காக வருவேன்..

சலீம் - மஸ்காரா போட்டு மயக்குறியே.

கோலிசோடா - ஜனனம்.. ஜனனம்..

நான் - மக்காயாலா.. மக்காயாலா..

வேலாயுதம் - வேலா.. வேலா.. வேலாயுதம்..

யுவன் யுவதி - உன் கண்ணைப் பார்த்த பிறகு..

உத்தமபுத்திரன் - உசுமுலாரசே.. உசுமுலாரசே.. மற்றும் என் நெஞ்சு சின்ன இலை..

நினைத்தாலே இனிக்கும் - செக்ஸி லேடி.. கிட்ட வாடி..

தநா அல 4777 - சொர்க்கம் மதுவிலே..

காதலில் விழுந்தேன் - டோலே.. டோலே.. புயலாய் புறப்படு..

அஞ்சாதே - மனசுக்குள் மனசுக்குள் புதுமழை..

போன்ற பல பாடல்கள்.

தற்போது படைப்பில் இயக்குநர் மகிழ்த்திருமேனி அவர்களது திரைப்படம், அருண்விஜயின் சினம் திரைப்படம் போன்ற பத்திற்க்கும் மேற்பட்டத் திரைப்படங்கள்.

இதுவரை கவியரசு கண்ணதாசன் விருது உட்பட பலப்பல விருதுகள்.

2015 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இயங்கி வரும் சர்வேதச அப்போஸ்தல பல்கலைக்கழகம் வழங்கிய இலக்கியத்திற்கான டாக்டர் பட்டம்.

2017 ஆம் ஆண்டு குளோபல்பீஸ் பல்கலைக்கழகம் (USA) வழங்கிய இலக்கியத்திற்கான டாக்டர் பட்டம்.

பாடலாசிரியராக மட்டுமில்லாது.. சிறந்த அடுத்தத் தலைமுறைப் பாடலாசிரியர்களை உருவாக்க வேண்டும் எனும் நன்னோக்கத்தில்.. உலக அளவில் முதல்முறையாக தமிழ்த்திரைப்பாடல் எழுதக் கற்றுத்தரும் முதல் பாடலாசிரியர் பயிற்சி நிறுவனமாய் 2013 ஆம் ஆண்டில் அடியேன் நிறுவிய "தமிழ்த் திரைப்பாக்கூடம்".

இந்த அமைப்பின் வழி "திரைப்பாடல் இயற்றுநர்" பட்டயப் படிப்பை நடத்தி, கடந்த எட்டு ஆண்டுகளாகப் பலருக்குக் கற்பித்துவரும் பாடல் எழுதும் பயிற்சி.

முன்னணிப் பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், திரைத்துறை பிரபலங்கள் நேரடியாகக் கலந்துகொண்டு பயிற்சி அளித்துவரும் இவ்வகுப்பில் இருந்து இதுவரை இருபத்திற்கும் மேற்பட்ட இளம் பாடலாசிரியர்கள் திரைத்துறையில் பாடல் இயற்றி வருகின்றனர்.

இங்கணம்.. மொழியோடும்.. இசையோடும் இயங்கிவரும் ஒரு படைப்பாளியின் பயணம்.

நன்றி..


தொடர்பிற்கு : [email protected]

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
August 18, 2023 128 +1 +0.8%
October 03, 2022 127 -2 -1.6%
August 12, 2022 129 +1 +0.8%
July 06, 2022 128 +1 +0.8%
May 30, 2022 127 -3 -2.4%
April 22, 2022 130 +1 +0.8%
March 14, 2022 129 +3 +2.4%
January 16, 2022 126 +4 +3.3%
December 09, 2021 122 +3 +2.6%
November 01, 2021 119 +4 +3.5%

Charts

Member of

More Clubhouse users