"கலைஞன் என்பவன் கலை மீதான கலாபக் காதலன்"
கலைக்காக மயிர் வளர்த்தோரும் உண்டு,
உயிர் வளர்த்தோரும் உண்டு
உணர்க... வளர்க... வாழ்க...🤗😇🖤💐
என்னைப் பொறுத்தவரை
நான் எழுதுகின்ற வரிகள்
எனக்குக் கவிதை தான்😇
"உன் மதி தான்
உனக்கு மதிப்பை பெற்றுத் தரும்"
.........................................................................
அதிவேகமாய் ஓடும் காலம்!
அதில் வேகமாய் ஏறும் வயது!
எல்லை இல்லா கனவுகள்!
ஏக்கமான ஆசைகள்!
எதிர்பாராத துக்கங்கள்!
எதிர்பார்ப்பிலே இன்பங்கள்!
பல தூய நண்பர்கள்!
அதில் சில தீய நண்பர்கள்!
அடர்பனி போல் பிரச்சனைகள்!
புரிதலுடன் விட்டுக்கொடுத்தல்!
புதிரான இழப்புகள்!
சுடும் நெருப்பாய் வலிகள்!
சில பயனில்லாத உறவுகள்!
பல பயம் காட்டும் இலட்சியங்கள்!
இடைவிடாத முயற்சிகள்!
பழிசுமத்தும் சமூகம்!
எலியும் பூனையுமாய் காதல்!
ஏளனமாய் சிலரின் சிரிப்பு!
எரிச்சலூட்டும் சிலரின் செயல்கள்!
ஒருமனதாய் சகிப்புத்தன்மை!
காட்ட முடியாத கோபம்!
கண்களையே அறியாமல் வரும் கண்ணீர்!
அவ்வப்போது அனுபவசாலிகளின் அறிவுரைகள்!
இத்தனைக்கும் நடுவில்
வாழ்க்கை ஏதோ சுமாராகப்
பயணித்துக் கொண்டிருக்கும் வேலையில்!
பல வினாக்களுக்கு விடைதேடிக் கொண்டிருக்கிறது
இந்த மனம்..!
-விடியலை நோக்கி ✍🏼 வல்லா...
மஞ்சள் மாநகரம்,
பெரியார் மாவட்டம்,
ஈரோடு மண்ணில் பிறந்தவன்...
("28 - வயதைக் கடந்தவன்")
காட்சித் தொடர்பியல் பட்டம் முடித்தவன்(Bsc.Vis.com),
திருமணமானவன் 💍💕
நான் பயணித்துக் கொண்டிருக்கும் இந்தப் பாதையில் பலரிடம் பழகிக் கற்றுக்கொண்ட அனுபவங்கள் மூலம்,
எனக்குத் தெரிந்த பாணியில்,
ஏதோ சுமாராகக் கவிதை-பாடல்-வாசக வரிகளைக் கிறுக்குபவன்...
ஒரு முழு எழுத்தாளனாக முயற்சி செய்து கொண்டிருப்பவன்...
சாதி சுயநல-சதியென்றும்
மதம் தலை-விதியென்றும்
சமூகச் சாக்கடையில்
சுமூகப் பூக்கடையாய்த் திரிபவன்...
Instagram id- mr.valla_
Invited by: Revanth Sounder
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
June 03, 2024 | 1,177 | +266 | +29.2% |
July 09, 2023 | 911 | -6 | -0.7% |
November 23, 2022 | 917 | +10 | +1.2% |
September 14, 2022 | 907 | +79 | +9.6% |
July 31, 2022 | 828 | +17 | +2.1% |
June 24, 2022 | 811 | +14 | +1.8% |
May 18, 2022 | 797 | +16 | +2.1% |
April 10, 2022 | 781 | +155 | +24.8% |
February 11, 2022 | 626 | +91 | +17.1% |
January 04, 2022 | 535 | +58 | +12.2% |