தேயாத பூம்பாதை ஒன்றோடு நான்
ஓயாத காற்றாக என்னோடு நீ✨
நிற்காத பாட்டாக உன் காதில் நான்
வீழாத உற்சாக ஊற்றாக நீ✨
மாறாத இன்பத்து பாலாக நான்
தீராத தீக்காமம் ஒன்றாக நீ✨
தூங்காத உன் கண்ணின் கனவாக நான்
தூரத்தில் இருந்தாலும் பிரியாத நீ✨
வாசத்தின் வாசலில் தோரணம் நான்
வார்த்தைகள் தித்திக்கும் காரணம் நீ✨
யாசித்து நீ கேட்ட இரவாக நான்
யாருக்கும் தெரியாத உறவாக நீ✨💜