அன்புள்ள ராம்,
உங்களுக்கு யாரும் இல்லையா? அது பொய்யில்லையா?
உங்கள் காதல் மனைவி காத்துக்கொண்டிருப்பதை மறந்துவிட்டீர்களா? நீங்கள் கட்டிய தாலி என் மார்போடு உரசி மனதோடு பேசிக்கொண்டிருப்பதை மறந்துவிட்டீர்களா? உங்களை போலவே உங்கள் காஷ்மீர் உறைந்துவிட்டது. என்னை போலவே என் தோட்டம் வாடிவிட்டது. எந்தச்செடியும் பூக்கவில்லை அதனால் பட்டாம்பூச்சிகளுக்கும் வேலையில்லை. நீங்கள் வரும்போது தோட்டாக்களுக்கு பதிலாக என் தோட்டத்திற்கு பட்டாம்பூச்சி கொண்டுவருவீர்களா?
இதோ வருகிறேன் என்று சொல்லி நீங்கள் போருக்குச்சென்றபோதே என் உறவினர் நகையாடினர். போர்வீரனை மணப்பவளுக்கு தலையணைதான் தலைவனென்று...
சரி இனிமேல் என்ன செய்யமுடியும், நீங்கள் போய் உங்கள் போரை தழுவுங்கள். நான் என் தலையணையை தழுவுகிறேன்.
இப்படிக்கு,
உங்கள் காதல் மனைவி
சீதா மஹாலக்ஷ்மி
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
October 02, 2022 | 9 | +3 | +50.0% |
August 10, 2022 | 6 | +1 | +20.0% |
April 20, 2022 | 5 | +1 | +25.0% |
March 13, 2022 | 4 | +1 | +33.4% |
December 08, 2021 | 3 | -2 | -40.0% |