அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருபெயரால்
(அதற்கவர், இதைப் பற்றித் தன் குழந்தையிடம் கேட்கும்படி) அதன் பக்கம் (கைய) ஜாடை காண்பித்தார்.அதற்கவர்கள் "மடியிலிருக்கக்கூடிய சிறு குழந்தையிடம் நாங்கள் எவ்வாறு பேசுவோம்" என்று கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 19:29)
(இதனைச் செவியுற்ற அக்குழந்தை அவர்களை நோக்கிக்) கூறியதாவது: "நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய ஓர் அடிமை. அவன் எனக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து நபியாகவும் என்னை ஆக்குவான்.
(அல்குர்ஆன் : 19:30)
நான் எங்கிருந்தபோதிலும் அவன் என்னை மிக்க பாக்கியவானாகவே ஆக்குவான். நான் வாழும் வரையில் தொழுகையைக் கடைப்பிடித்தொழுகும் படியும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் அவன் எனக்கு உபதேசித்திருக்கிறான்.
(அல்குர்ஆன் : 19:31)
என்னுடைய தாய்க்கு நான் நன்றி செய்யும்படியாகவும் (எனக்கு உபதேசித்து, நான் முரடனாகவும் வழி தப்பியவனாகவும் ஆகாதபடியும் செய்வான்.
(அல்குர்ஆன் : 19:32)
நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்றெழும் நாளிலும், ஈடேற்றம் எனக்கு நிலை பெற்றிருக்கும்" (என்றும் அக்குழந்தை கூறியது).
(அல்குர்ஆன் : 19:33)
இவர்தான் மர்யமுடைய மகன் ஈஸா. அவரைப் பற்றி (மக்கள் வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் உண்மையான விஷயம் இதுதான்.
(அல்குர்ஆன் : 19:34
ஆகவே, (அவர் இறைவனுமல்ல; இறைவனுடைய பிள்ளையுமல்ல. ஏனென்றால்) தனக்குச் சந்ததி எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்கு (ஒரு சிறிதும் தகுதியல்ல. அவன் மிகப் பரிசுத்தமானவன். யாதொன்றை படைக்கக் கருதினால் அதனை "ஆகுக!" என அவன் கூறுவதுதான் (தாமதம்). உடனே அது ஆகிவிடும்.
(அல்குர்ஆன் : 19:35)
நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும், உங்களது இறைவனும் ஆவான். (ஈஸாவல்ல; ஆகவே,) அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். இதுதான் நேரான வழி (என்று நபியே! நீங்கள் கூறுங்கள்.)
(அல்குர்ஆன் : 19:36)
[ யூதர்கள் (நபி) "உஜைரை" அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர். (இவ்வாறே) கிறிஸ்தவர்கள் "மஸீஹை" அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகின்றனர். இவர்கள் தங்கள் வாய்களால் கூறும் இக்கூற்றானது இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்பவர்களின் கூற்றையே ஒத்திருக்கின்றது. அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான். (சத்தியத்தைப் புறக்கணித்து) இவர்கள் எங்கு வெருண்டோடுகின்றனர்?
(அல்குர்ஆன் : 9:30)
இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும், (தங்கள்) கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், வணக்கத்திற்குரிய ஒரே இறைவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே இவர்கள் அனைவரும் ஏவப்பட்டு இருக்கின்றனர். வணக்கத்திற்குரிய இறைவன் அவனையன்றி (வேறெவனும்) இல்லை. அவர்கள் இணை வைக்கும் இவைகளை விட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன்.
(அல்குர்ஆன் : 9:31)
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
November 20, 2023 | 64 | +2 | +3.3% |
July 03, 2022 | 62 | -1 | -1.6% |
May 27, 2022 | 63 | +2 | +3.3% |
April 19, 2022 | 61 | +3 | +5.2% |
March 11, 2022 | 58 | +3 | +5.5% |
January 13, 2022 | 55 | +3 | +5.8% |
December 07, 2021 | 52 | +1 | +2.0% |