முனைவர் விஜய் அசோகன் அவர்கள் தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சார்ந்தவர் . எடப்பாடி நகரினில் பள்ளிக் கல்வியையும் கோவை கல்லூரிகளில் உயர் கல்வியையும் முடித்து, நோர்வே நாட்டினிலே இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.... சீனா, சுவீடன், நார்வே உள்ளிட்ட நாடுகளின் பல்கலைக்கழகங்களிலும் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கூட்டு ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிந்து வருபவர். நோர்வே நாட்டின் அன்னை பூபதி தமிழ்க் கூடத்தின் தமிழ் மற்றும் அறிவியல் ஆசிரியராக ஏழு ஆண்டுகளும் சுவீடன் நாட்டின் கோத்தன்பர்க நகரத்தில் தமிழ் பள்ளியின் ஒருங்கிணைப்பாளராகவும் செயலாற்றி வருகிறார்.
சுவீடன் நாட்டின் தமிழ் பொறியியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை இணைத்து Nordic forum for science and technology என்ற அமைப்பையும் நிறுவி அதன் நிகழ்கால தலைமை பொறுப்பாளராகவும் பன்னாட்டு தமிழர் பேரவை என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக இருந்து பணியாற்றி வருகிறார். தமிழ்க் கல்வி, தமிழர் வரலாறு தொடர்பான ஆவணப்படங்களை உருவாக்குவதில் பன்னாட்டுத் தமிழர் பேரவை இயங்கி வருகிறது.
நோர்வே, சுவீடன், டென்மார்க், ஜெர்மனி, அமெரிக்கா, தமிழ்நாடு (இந்தியா) உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கருத்தரங்கம் மற்றும் மாநாடுகளில் சிறப்புரை ஆற்றியுள்ளார். கடந்த ஓராண்டாக இணையத்தின் வாயிலாக உலகத்தின் பல்வேறு நாட்டு தமிழ் அமைப்புகளின் நிகழ்வுகள், கருத்தரங்கங்களில், தமிழ் மொழி வரலாறு, தமிழ் இலக்கியம், தாய்மொழிக்கல்வி, தமிழ்வழிக் கல்வி சுற்றுச்சூழல் மேம்பாடு, ஐரோப்பிய மரபுசாரா எரிசக்தி கொள்கைகள், நோர்டிக் நாடுகளின் கல்விக் கொள்கை மற்றும் எரிசக்தி கொள்கைகள், தமிழக அரசியல், ஈழ அரசியல் உள்ளிட்ட தலைப்புகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட உரைகளும் ஆற்றியுள்ளார். இத்தலைப்புகளில், கடந்த 10 ஆண்டுகளில் ஐம்பதுக்கு மேற்பட்ட கட்டுரைகளும் இதுவரை எழுதியுள்ளார். இதுவரை நான்கு புத்தகங்களையும் தமிழில் எழுதியுள்ளார், 1) வீழ்ந்துவிடவில்லை விடுதலைப் புலிகள் (2009), 2) நோர்வே (2009), பிசாசுத்துகள்கள் (2015), தாய்மொழிக் கல்வி – உலக அரசியலும் கல்வியியலும் (2020)."நோர்டிக் நாடுகளின் கல்விக் கொள்கை", "உலகெங்கும் தமிழ் மொழிக்கல்வி", "ஆசிய நாடுகளில் தமிழ்மொழிக் கல்வி" ஆகிய மூன்று பன்னாட்டு கருத்தரங்கங்களின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டுள்ளார்.
Invited by: TE Library Library
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
October 10, 2023 | 304 | +5 | +1.7% |
November 18, 2022 | 299 | +3 | +1.1% |
September 08, 2022 | 296 | +2 | +0.7% |
July 29, 2022 | 294 | +4 | +1.4% |
June 22, 2022 | 290 | -9 | -3.1% |
May 15, 2022 | 299 | +1 | +0.4% |
April 07, 2022 | 298 | +1 | +0.4% |
February 08, 2022 | 297 | +3 | +1.1% |
January 02, 2022 | 294 | +8 | +2.8% |
October 17, 2021 | 286 | +8 | +2.9% |