🅂🄷🄾🅁🅃 🅂🅃🄾🅁🅈 🅆🅁🄸🅃🄴🅁
𝕾𝖍𝖔𝖗𝖙 𝕱𝖎𝖑𝖒 𝕮𝖗𝖊𝖆𝖙𝖊𝖗
🅼🅸🅼🅸🅲🆁🆈
ᑕᗩᗰEᖇᗩ ᗰᗩᑎ
-----+++++---------++-
#* நாளைய பிணங்கள் *#
இந்த உலகம் நாம் பார்க்கும் ஒவ்வொரு பார்வைக்கு ஏற்ப அது தன் சுயத்தை உள்ளிருந்து வெளிக்காட்டுகிறது.
உதாரணத்திற்கு வெவ்வேறு வடிவங்களில் உள்ள பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றுவது போல…
நிமிடத்திற்கு தொடரும் ஆயிரக்கணக்கான இழப்புகளும் ஆயிரக்கணக்கான பிறப்புகளும் இந்த உலகை ஒரு சமன்பாட்டில் வைத்திருக்க உதவுகின்றன…
சமனாக இருக்கும் தராசு தட்டுகள் கூட சமனாவதற்கு சில ஆட்டம் ஆடிய பிறகே சமநிலையை அடைகிறது…
அதுபோல்தான் மனித மனமும் உலக சமத்துவமும்... மிகப்பெரிய தாண்டவத்திற்கு பின்னே சமநிலை அடையும்…
உலகின் பல மூலைகளிலும் அழிவு என்பது நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே எங்கோ ஒரு மூலையில் அதை சரி செய்யும் வகையில் புதிதாக வேறு ஒரு வடிவம் உருவாகி வருகிறது என்பதை மறுக்க முடியாது…
இறப்பை சமன் செய்யும் பிறப்பை போல.
ஒன்றில் இல்லாதது மற்றொன்றில் எவ்வாறு இருப்பதில்லையோ அது போலதான்...பல உறவுகளின் தொடர்கதையும் கூட...மனித ஆற்றலால் எதையும் மீட்க முடியும் என்றால் மனிதனை விட மிகச்சிறந்த ரட்சகன் எவனுமில்லை…
அப்படித்தானே?
பல மொழிகள் பல்வேறு வேற்றுமைகள் பல பிம்பங்கள் பல கலாச்சாரங்கள் பல நாகரீகங்கள் பல கற்பனைகளை உள்ளடக்கியது இந்த உலகம்..இது ஒரு மாய உருண்டை.. நீர் சூழ்ந்த ஒரு மாய உருண்டை..
கண்களின் பார்வை எல்லை எதுவரையோ அதுவரையே அறிவியலும்.. ஆனால் அதையும் தாண்டி பயணிக்கும் மனிதன் கடவுளை விட அபார சக்தி வாய்ந்தவன்..பல ஆயிரம் வருடங்களை கடந்து இந்த பூமியை மனிதன் படுத்தும் பாடு கொஞ்சமில்லை..
நிலங்களில் எல்லை கோடுகளை கிழித்து நாடுகளாக பிரித்து..பல மன்னர்கள் பல நாடுகள் என போர்களை தொடுத்து வென்றான்..
ஆனால் இயற்கைக்கு எதிராக எத்தனையோ போர்களை மனிதன் தொடுத்தாலும் ஜெயிப்பது என்னவோ இயற்கை தான்…
எத்தனையோ பிணங்களை மண்ணில் புதைத்து அதன் மேல் இறப்பதற்காக உயிர் பிழைத்து வாழும் மனிதர்களாகிய நாம் இந்த நொடியில் அதிர்ஷ்டசாலிகள்தான்.
இது கூட புரியாமல் சாதிகளை சுமந்து
மதங்களை உமிழ்ந்து நாத்திக வசனம் பேசி தீட்டு எனும் தீமை பேசி நோட்டு வாங்கி ஓட்டு போட்டு நாட்டை நாசமாக்க நல்ல சித்தாந்தம் இதுதான் என ஏதோ ஒன்றை தூக்கிப் பிடித்து நாறடிக்கும் இந்த நாற்றம் பிடித்த மனிதர்கள்.... இத்தனையும் சுமந்து கொண்டு கழுதையாய் கதறுகின்றனர்...
உலக திரைக்கதையில் அனைவரும் கதாப்பாத்திரங்களே தவிர எவர்க்கும் இங்கு நிலையான வாழ்வோ இல்லை வெற்றியோ அல்லது மீட்போ தொடராது...
நேற்றைய இழப்புகளும் இன்றைய பிறப்புகளும் நாளைய வரலாறை படைக்கும் பழைமை கலந்த புதுமையே தவிர...
அடுத்தடுத்த சுவராஸ்யங்கள் தொடர்வதை ஒருபோதும் தவிர்க்க முடியாது…
பல வரலாறுகள் அழிந்து போன ஒரு வரலாற்றை கடந்து அதன் மீதுதான் உயிருள்ள நாளைய பிணங்களாக நாம் பயணிக்கின்றோம்..
எல்லாம் அவன் செயல்...
-இனியவன் முத்து
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
September 29, 2023 | 189 | +4 | +2.2% |
February 01, 2023 | 185 | +1 | +0.6% |
September 30, 2022 | 184 | +2 | +1.1% |
July 03, 2022 | 182 | -3 | -1.7% |
May 27, 2022 | 185 | -5 | -2.7% |
January 13, 2022 | 190 | -1 | -0.6% |
December 06, 2021 | 191 | -2 | -1.1% |