உன்னை பின் தொடர்கிறேன் உன் பெயரை எனது பெயரில் இணைக்கவே மறுக்காதே மறுதளிக்கிறேனடா!!
இன்னமும் பாராமுகம் ஏனடா
அந்த கள்வனின் பெயரிட்டு என் உள்ளம் கவர் கள்ளனடா நீ...
எனக்கு காந்த அறிவியலும் முரணாகிறது உன்னால்
ஏறெடுத்துப் பார் உனக்கு ஏற்றவள் நானில்லையா
நீ விரும்பும் வண்ணத்துப் பூச்சி நானாக விருப்பம்.
அவன் பேசும் சத்தம் நான் விரும்பும் இசையதுவே
என் மனம் என்னும் அசோகவனமும் அயோத்தியாகும் நீ கூறும் சரி என்னும் இரு எழுத்துக்கள் கொண்ட ஓர் வார்த்தையில்.