‘’ ஒரு எம் பி யாக இருந்துட்டு நீங்க இப்படி பேசியிருக்கலாமா!?’’ … இதுதான் கடந்த மூன்று நாட்களாக பலரும் என்னை நோக்கி எழுப்பும் கேள்வி.
நான் முதலில் தலைவர் கலைஞரால் வாழ்வு பெற்றவன். அந்த நன்றி உணர்ச்சியில்தான் இந்த இயக்கத்தில் முழு நேரமாக உழைக்கிறேனே தவிர பதவிக்காக அல்ல!
தலைவர் கலைஞரை இழித்துரைக்கும் பழித்துரைக்கும் ஆட்களுக்கு நான் அவர்கள் மொழியிலேயே பதில் சொல்ல என் பதவி தடையாக இருக்குமானால் அப்படி ஒரு பதவியே எனக்கு தேவையும் அல்ல!!
நான் இப்படி பேசுவதால் தலைவர் கலைஞர் மண்ணில் இருந்து எழுந்து வந்து என்னைப் பாராட்டப் போவதும் இல்லை… தான் இறந்த பிறகும் ஒருவன் தன்னை தாங்கிப் பிடிக்கிறான் என்பது அவருக்கு இனி தெரியப் போவதும் இல்லை!!!
இது அவரால் பயன் பெற்ற கடைநிலை தொண்டனின் உணர்ச்சி.. எம் பி யின் உணர்ச்சி அல்ல! இதெல்லாம் நான் என்ன சொன்னாலும் உங்களுக்குப் புரியாது.
இனி கலைஞர் திருட்டு ரயிலில் வந்தார் என பொய்யான அவதூறைச் சொல்லும் ஒவ்வொருவருக்கும் இந்த உண்மையை சொன்ன அவர்கள் பாட்டி நினைவும் சேர்ந்தே வரும் இல்லையா!! அந்த நினைவு வரும் வரை இந்த அப்துல்லாதான் தொண்டனாக கலைஞரை இன்னமும் தாங்குகிறான் என்று அர்த்தம் 🙂