உலகெங்கும் பரந்துவாழும் ஈழத்தமிழர்களின் அறிவியல் யுத்தத்தின் திறவுகோல்.
பெண்களுக்கு முன்னுரிமை.
தனிமனித திறமைகளை அங்கீகரித்து களம்கொடுப்போம்.
தனிப்பட்ட கட்சி சார்ந்த நடவடிக்கையை புறம்தள்ளி அறிவியலால் ஒன்றிணைவோம்.
வரலாறே எதிர்காலத்தை திட்டமிடுகின்றது .ஆகையால் வரலாறை ஆழமாக கற்றுக்கொள்ளுங்கள் .
ஒரு வரலாற்று ஆசிரியர் நாணயத்தின் ஒரு பக்கமாக குழந்தையாகவும் மறுபக்கமாக ஞானியாகவும் இருப்பார்.
வரலாற்று ஆசிரியர்களை சரியாக புரிந்துகொண்டு அவர்களின் அறிவுரைகளை ஆழமாக அரசியல் தத்துவரீதியாக உள்வாங்கி மக்களின் தலைவர் செயற்படுவாராக இருந்தால் அந்தத் தலைவரை உலகத்தால் வெல்ல முடியாது.
அறிவியல் பலத்தின் முன்னால் ஆயுதப்பலம் எப்போதுமே மண்டியிடும்.
தேசிய மக்களின் பலத்தின் முன்னால் ஆயுதமும், தொழில்நுட்பமும், விண்வெளி சாகசங்களும் தூசைப்போல பறந்துவிடும்.
தேசிய மக்களின் தலைவனை, தேசிய மக்களில் இருந்து பிரித்தே ஆயுதங்கள் வெற்றிபெறுகின்றன.
தேசத்தின் மக்களை பலிக்கடாவாக்கியே அந்தத்தேச மக்களின் தலைவனை வென்றதாக ஆயுதத்தின் பலம் எக்காளமிடுகின்றது.
தமிழீழம் உருவாகும் இதனை யாரும் தடுக்க முடியாது.