கம்பராமாயணம் - வாசிப்பு on Clubhouse

கம்பராமாயணம் - வாசிப்பு Clubhouse
477 Members
Updated: Mar 28, 2024

Description

கம்பராமாயணத்தை முழுவதுமாக வாசிக்கும் பேரவாவுடன் இக்குழுமம் தொடங்கப்பட்டுள்ளது. வாரம் மும்முறை (திங்கள், புதன் வெள்ளி) இந்திய நேரம் இரவு 8.25 இலிருந்து 10.30 வரை வாசிக்கப்படும்.

கம்பராமாயண வாசிப்பு சந்திப்பிற்கு சில முன் அறிவுறுத்தல்கள்:

1. அடிப்படை வாசிப்பு முறை. பாடல்கள் இருமுறை சந்தத்தோடு வாசிக்கப்பட்டு பொருள் சொல்லப்படும். அடிப்படை ஓசை நயம், காவிய மரபு மற்றும் தமிழ்ப்பா இலக்கணம் ஆகியவற்றின் பின்னணி போன்றவை கவனிக்கப்படலாம்.

2. உரையும் பொருளும். நமது உரை நம் முக்கியமான கருவி. அடிப்படை வாசிப்பிற்கு நாம் பயன்படுத்தும் கம்பன் கழக உரையை சார்ந்திருக்கிறோம். வேறு உரை பயன்படுத்தும் நண்பர்களும் உள்ளோம்.  இவைதாண்டி பொருள் கொள்வதில்,  அடிப்படை தகவல்களை விளக்கிக் கொள்கையில் (அசுணம், மராமரம்..) மேலதிக ஆதாரங்கள், ஊகங்கள் கொண்ட ஆராய்ச்சிகளுக்கு இடமுண்டு. ஆனால் அறுதி முடிவு என்று சொல்வதற்கில்லை.

3. மேலதிக வாசிப்பும் விவாதமும். உள்ளுணர்வு, கவிதை நுண்ணுணர்வு சார்ந்து உரையை மறுவாசிப்பு செய்தால், அப்படி செய்பவர் அதற்கான அடிப்படை காரணத்தையும் சேர்த்தே முன்வைக்க வேண்டும். அவ்வாசிப்பை முழுதாக உள்வாங்கிக்கொள்ளவும், 'இப்படி ஏன் இருக்கவேண்டும்?' என்ற குழப்பத்தை தவிர்க்கவும் இது தேவையானது.

4. முன்முடிவற்றிருத்தல். கம்பனில் கூட நாம் ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது பொருந்தாத சொற்கள் அல்லது கருத்துகள் இருக்கக்கூடும். விமர்சனப்பூர்வமாக அதை அணுக வேண்டும். 

5. இலக்கிய வாசிப்பு. இது பக்தி சார் வாசிப்பு அல்ல, இலக்கிய வாசிப்பு. இதில் நெகிழ்ச்சி, காவியத்தை அந்தரங்கமாக வாசித்தல், தர்க்கம், விமர்சனம் என அனைத்திற்கும் இடமுண்டு. 

6. வாசிப்புத் தளங்கள். ஒரு உதாரணமாக, வெண்முரசின் வாசிப்புக்கு மூலநூல், பிற மகாபாரத மறு ஆக்கங்கள், சமகால சமூகம் அரசியல் சார்ந்த பார்வைகள் எல்லாம் எப்படி உதவுகிறதோ, கம்ப ராமாயணத்திலும் சமூகம், வரலாறு, அரசியல் பார்வைகள் குறித்த மதிப்பீடுகள் அமைந்துள்ளது. அதை தர்க்கப்பூர்வமாக வளர்த்தெடுக்க வேண்டும். அணிச்சொல், நாடகம் ஆகியவற்றைத் தாண்டி கம்பன் முன்வைக்கும் மானுட அறம் பற்றிய சிந்தனை முதன்மையானது.  

7. அரங்க இயல்பு. இப்படியொரு வாசிப்பில் இயல்பாகவே 'விவாதம்' அதற்கான இடத்தை கொண்டிருக்கிறது. அதேபொழுது இது ஒரு இலகுவான நட்பார்ந்த உரையாடலாக அமைந்தால் மலைப்பும், களைப்பும், சலிப்பும் எழாமல் கொண்டுசெல்ல முடியும்.

8. மட்டுறுத்தல். உரையாடல் நீண்டுபோகும் பட்சத்தில் மட்டுறுத்துனர்களின் தலையீடு இருக்கும். நண்பர்கள் அதை ஏற்றுக்கொண்டு முன் செல்லலாம்.

9. முன்வாசிப்பு. மிக மிக முக்கியமானது இது. ஒருமுறை பாடல்களை முன்வாசிப்பு செய்துவந்தால் சிலவகை ஐயங்களுக்கான விடைகளை நாமே கண்டறிந்துவிடலாம்.

இவை நேரத்தை செறிவாக பயன்படுத்தும் விதமாக நமக்கு நாமே விதித்துக்கொள்ளும் விதிகள் தானேயன்றி வேறில்லை. நன்றி.

https://archive.org/details/vrajeshkumar_gmail_061

Last 30 Records

Day Members Gain % Gain
June 19, 2023 477 +24 +5.3%
March 18, 2023 453 +8 +1.8%
March 03, 2023 445 +12 +2.8%
January 31, 2023 433 +1 +0.3%
January 27, 2023 432 +2 +0.5%
January 23, 2023 430 +3 +0.8%
January 20, 2023 427 +1 +0.3%
January 16, 2023 426 +1 +0.3%
January 08, 2023 425 +2 +0.5%
January 01, 2023 423 +1 +0.3%
December 28, 2022 422 +2 +0.5%
December 24, 2022 420 +2 +0.5%
December 20, 2022 418 +13 +3.3%
November 25, 2022 405 +1 +0.3%
November 19, 2022 404 +6 +1.6%
November 06, 2022 398 +1 +0.3%
October 24, 2022 397 +1 +0.3%
October 17, 2022 396 +4 +1.1%
October 10, 2022 392 +1 +0.3%
October 04, 2022 391 +1 +0.3%
September 30, 2022 390 +4 +1.1%
September 26, 2022 386 +1 +0.3%
September 19, 2022 385 +1 +0.3%
September 13, 2022 384 +3 +0.8%
September 06, 2022 381 +5 +1.4%
August 27, 2022 376 +3 +0.9%
August 21, 2022 373 +4 +1.1%
August 14, 2022 369 +2 +0.6%
August 08, 2022 367 -1 -0.3%
August 01, 2022 368 +4 +1.1%

Charts

Some Club Members

More Clubs