மனிதவியத்தை (Humanism) அடிப்படையாகக் கொண்டு சமூகத்தில் பகுத்தறிவை வளர்க்கும், அறிவியல்சார் நாத்திகர் குழுவான SAT (Science and Atheism in Tamil) உங்கள் அனைவரையும் வரவேற்கிறது.
அறிவியல் அடிப்படையிலான இறை மறுப்பை மக்களிடம் கொண்டு செல்வது பகுத்தறிவாளர்களின் கடமையாக உணர்கிறோம்.
கடவுள், மதம், சாதி, இனம், நிறம், பாலினம், மொழி, நாடு சார்ந்த தீண்டாமை மற்றும் பல்வேறு கண்மூடித்தனமான நம்பிக்கைகளெல்லாம் மக்களின் அறிவியல் அறிவு போதாமையாக கருதுகிறோம். இதுவே சமூகத்தின் பல பிரச்சினைகளுக்கு ஆணிவேராகவும் இருக்கிறது.
இதன் காரணமாக அறிவியல்சார் நாத்திகத்தை மக்களிடத்தில் பரவலடையச் செய்ய வேண்டியது சமூகக் கடமையாகப் பார்க்கிறோம்.
இன்று நாத்திகம் பற்றி மக்கள் வெவ்வேறு பார்வையில் இருக்கும்போது இதனைப் பரப்புவது கடினம் என்ற போதும் இப்பணியை மகிழ்வோடு நாங்களும் செய்கிறோம், பிறரையும் செய்யுமாறு ஊக்குவிக்கிறோம்.
எமது நோக்கம் சகல மதங்கள் மற்றும் மூட நம்பிக்கைகளின் மீது சமரசமற்ற முறையில் ஆக்கபூர்வமான அறிவியல் சார்ந்து விமர்சனங்களை முன்வைப்பதேயாகும்.
இக்குழு வன்முறை, வெறுப்பு பிரச்சாரம், அறிவியலுக்கு புறம்பான போதனைகள், மூடநம்பிக்கைகள், பொய்கள், தனிப்பட்ட தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றுக்கு எதிரானது.
SAT நெறியாளர்கள் வேறு தளங்களில் வெளிப்படுத்தும் கருத்துக்களும், சித்தாந்தங்களும் SAT யின் பார்வையாக எடுத்துக்கொள்ள முடியாது.
அறிவியல்சார் நாத்திகர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள். அறிவியலுக்கும் பகுத்தறிவிற்கும் ஏற்பில்லாத எல்லா சித்தாந்தங்களையும் கேள்வி கேட்பவர்கள்.
கருத்து சுதந்திரம், மனித உரிமை, சமூகநீதி மற்றும் மக்களாட்சி்யை உலகம் முழுதும் வலியுறுத்துபவர்கள்.
யார் எதற்காக செய்தாலும் சர்வாதிகாரம் ஏற்புடையதல்ல. யாரையும் தலைவர்களாகவோ, விமர்சிக்கமுடியாத புனிதராகவோ ஏற்பது பகுத்தறிவின்மையாகும்.
எல்லா மனிதர்களும் சமமானவர்களே !
இயற்கை வளங்களையும், உயிரினங்களையும் தன் சுயநலத்துக்காக மனிதநேயமின்றி சுறண்டுவதை ஏற்கமுடியாது.
அரசு, அரசியல், கல்வி மற்றும் சமூகத்தின் எல்லாத் தளங்களிலிருந்தும் அறிவியலுக்கு எதிரான அனைத்து மூடநம்பிக்கைகளும் அகற்றப்படவேண்டும் என்று வலியுறுத்துபவர்கள்.
அறிவியல்சார் நாத்திகமென்பது ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது நாடு சார்ந்து இயங்குவதில்லை, அது தமிழ் தெரிந்த மக்கள் அனைவருக்குமானது.
We also will conduct Science based Atheism sessions in English when it requires.
Day | Members | Gain | % Gain |
---|---|---|---|
March 13, 2024 | 472 | +11 | +2.4% |
January 23, 2024 | 461 | +18 | +4.1% |
December 09, 2023 | 443 | +12 | +2.8% |
November 01, 2023 | 431 | +3 | +0.8% |
October 02, 2023 | 428 | +33 | +8.4% |
September 02, 2023 | 395 | +7 | +1.9% |
August 05, 2023 | 388 | +34 | +9.7% |